[X] Close

125 கோடி இந்தியர்களே என் தெய்வம்: பிரதமர் மோடி

Modi-Speech-in-Gujarat-Election-Campaign

இந்தியாவின் 125 கோடி மக்களே தனது தெய்வம் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 


Advertisement

குஜராத் சட்டப்பேரவையின் முதல்கட்ட தேர்தல் வரும் 9ஆம் தேதியும், இரண்டாம்கட்ட தேர்தல் 14ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இதற்காக பிரதமர் மோடி உட்பட மத்திய அமைச்சர்கள், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உட்பட அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் குஜராத்தின் ராஜ்கோட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய மோடி, 125 கோடி மக்களே தனது தெய்வம் என்றார்.

தொழிலதிபர் ஒருவருக்கு தான் 48 ஆயிரம் கோடி ஏக்கர் நிலத்தை தந்துவிட்டதாக ராகுல் காந்தி கூறுவதாகவும், ஆனால் அவர் கூறும் நிலத்தின் அளவு உலகில் உள்ள ஒட்டுமொத்த நிலப்பரப்பை விட 3 மடங்கு பெரியது என்றும் மோடி தெரிவித்தார். இதைக் கண்டு சிரிப்பதா, அழுவதா என்றே தெரியவில்லை என்றும் அவர் கூறினார். இதுபோன்று பேசுபவரை தலைவராக கொண்ட கட்சியிடம் மக்கள் என்ன பெரிதாக எதிர்பார்க்க முடியும் என்றும் மோடி கேள்வி எழுப்பினார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close