சர்வதேச பெண்கள் தினத்தை மத்திய அரசு வரும் மார்ச் மாதம் 8-ம் தேதி விமர்சையாக கொண்டாட உள்ளது. இதற்காக ‘ஆணும் பெண்ணும் சமம்’ என்னும் கருத்தை வலியுறுத்தி பிரச்சாரமும் தொடங்கப்பட்டுள்ளது.
இதில் இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஆன விராட் கோலி மற்றும் பல்வேறு பிரபலங்கள் பங்கேற்கின்றனர். நடிகை பிரியங்கா சோப்ரா, முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் மற்றும் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் ஆகியோர் மார்ச் 8-ம் தேதி வரை சமூக வலைதளங்களில் நடைபெறும் பிரச்சாரத்தில் பங்கேற்பார்கள் என தெரிகிறது.
இதற்கான பிரச்சாரத்தை சமூக வலைத்தளங்களில் மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி சமீபத்தில் தொடங்கி வைத்தார். வரும் நாட்களில் ஆண், பெண் சமத்துவத்தை வலியுறுத்தியும் பெண்களுக்கான கல்வி, சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் பாதுகாப்பு குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Loading More post
"பேரறிவாளனுக்கு பிடித்த மாதிரியான பெண் கிடைத்துவிட்டால்.." - அற்புதம்மாள் பேட்டி
மாதம் ரூ.25,000 சம்பாதிக்கிறீர்களா? நீங்கள் இந்தியாவின் முதல் 10% இல் உள்ளீர்கள்!
"மொழி அரசியல் மூலம் ஆதாயம் தேட முயற்சிக்கிறார்கள்” - பிரதமர் மோடி பேச்சும் பின்னணியும்!
தமிழகத்தில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு? - அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்
லட்சத்தீவு அருகே நடுக்கடலில் பிடிபட்ட 218 கிலோ ஹெராயின் போதைப்பொருள்! பின்னணி என்ன?
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்