[X] Close

அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் முறை: ஸ்டாலின் எதிர்ப்பு

Dmk-acting-leader-MK-Stalin-oppose-out-sourcing-method-in-Govt-jobs

அரசுத் துறைகளில் அவுட்சோர்சிங் அடிப்படையில் பணியாளர் சேர்ப்பதை உடனடியாக கைவிட எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் தனது அறிக்கையில் நிரந்தரமாக வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் பணியாளர்கள் சட்ட விதிமுறைகளை அனுசரித்து முறைப்படி நியமிக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், வெளிப்பணியாளர்கள் நியமன முறையில் பணியாளர்களை அமர்த்தும் தனியார் நிறுவனங்கள் மாதம் 25 ஆயிரம் அல்லது 30 ஆயிரம் ரூபாய் சம்பளம் என கூறிவிட்டு 7 அல்லது 8 ஆயிரம் ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்குவதாகவும் அவர் கூறியுள்ளார். மீதி பணத்தை சம்பந்தப்பட்ட நிறுவனங்களும், இடைத்தரகர்களும் சுரண்டி விழுங்கி விடுவதாகவும் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close