ஹாங்காங் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பிவி சிந்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
உலக தரவரிசையில் மூன்றாவது இடத்தில் உள்ள சிந்து, அரையிறுதியில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனை எதிர்கொண்டார். அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சிந்து, 21-17, 21-17 என நேர்செட் கணக்கில் ரட்சனோக் இன்டனோனை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இறுதிப் போட்டியில் பிவி சிந்து, முதல் இடத்தில் இருக்கும் சீனாவின் தாய் சூ யிங்-ஐ எதிர்கொள்கிறார். கடந்த முறை இறுதிப் போட்டியிலும் இருவர்தான் பலப்பரீட்சை நடத்தினார்கள். அதில் சீன வீராங்கனை வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் ஆக்ரோஷமாக விளையாடி வரும் சிந்து பட்டத்தை கைப்பற்றுவார் என்று இந்திய ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Loading More post
ஓராண்டு சிறை தண்டனை: இன்று சரணடைகிறார் நவ்ஜோத் சிங் சித்து
`சட்ட போராட்டம் தொடரும்’-கனகசபை மீதேறி பக்தர்கள் தரிசனம் செய்ததற்கு தீட்சிதர்கள் எதிர்ப்பு
இந்த சீசனில் இதுவே கடைசிப் போட்டி - இன்று ராஜஸ்தானுடன் மோதும் சிஎஸ்கே
பழைய ஃபார்மிற்கு திரும்பிய விராட் கோலி - குஜராத்தை வீழ்த்தியது பெங்களூரு
``பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தனும், ஆதார் கொடுக்கனும்"-உச்சநீதிமன்றம் உத்தரவு