குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத்தை சந்திக்க பிரதமருக்கு தைரியம் இல்லை என காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தில் உரையாற்றிய அவர், மத்திய அரசு அற்பக் காரணங்களைக் காட்டி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை தள்ளிப்போட்டிருப்பதாக குற்றஞ்சாட்டினார். சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன் ஜனநாயகத்தின் கோவிலான நாடாளுமன்றத்தை பூட்டிவிடுவதன் மூலம் அதன் பொறுப்புகளிலிருந்து தப்பிவிடலாம் என அரசு தப்புக் கணக்கு போடுவதாக அவர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில்தான் உயர்மட்ட ஊழல் குறித்தும், அமைச்சர்களுக்கு இருக்கும் தொடர்புகள் குறித்தும் கேள்வி எழுப்ப முடியும் என்றும் சோனியா காந்தி குறிப்பிட்டார். இந்த கேள்விகளுக்கெல்லாம் அரசு பதிலளிக்க வேண்டும், ஆனால் குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் இந்த கேள்விகளை சந்திப்பதை தவிர்க்கும் வகையில் குளிர்காலக் கூட்டத்தொடரை வழக்கமாக கூட்டப்படும் காலத்தில் கூட்டுவதில்லை என்ற அசாதாரணமான முடிவை எடுத்துள்ளதாக சோனியா காந்தி கூறினார்.
வேலை வாய்ப்பின்மை, உயரும் பணவீக்கம், குறைந்து வரும் ஏற்றுமதி, ஜிஎஸ்டி போன்றவை லட்சக்கணக்கான மக்களுக்கு கடும் துன்பத்தை அளித்துள்ளது என்றும் பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டு ஒராண்டு கடந்த நிலையிலும் அது விவசாயிகள், சிறு வணிகர்கள், குடும்பத் தலைவிகள் மற்றும் தினசரி கூலிக்கு வேலை செய்பவர்கள் ஆகியோரின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகத்தான் அமைந்துள்ளதாக அவர் கூறினார். ஏழை எளிய மக்களின் எதிர்காலத்தை சிதைத்து ஒரு சிலரின் சொத்துகள் பெருகுவதாகவும், எனினும் பிரதமர் தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டும், பொய் வாக்குறுதிகளை அளித்தும், நிஜக் களத்திற்கு தொடர்பில்லாத புள்ளி விவரங்களையும் அளித்து வருவதாகவும், நேரு, இந்திரா காந்தி உள்ளிட்டோரின் பங்களிப்புகளை திட்டமிட்டு நீக்கி, நவீன இந்தியாவின் வரலாற்றை வலுக்கட்டாயமாக மாற்றியமைக்க அரசு முயற்சிப்பதாகவும் இந்த பழிவாங்கும் நடவடிக்கைகள் வெளிப்படையாக நடைபெறுவதாகவும் கூறிய அவர், இவற்றால் மக்கள் ஏமாற்றப்படவில்லை என்பதை நிரூபிக்கும் வகையில், குஜராத்தில் தற்போதுள்ள அரசை வீழ்த்த உழைக்க வேண்டும் என கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Loading More post
”நிச்சயமாக அடுத்த சீசனில் விளையாடுவேன்”-சென்னை ஃபேன்ஸ்க்கு தோனி கொடுத்த இன்ப அதிர்ச்சி
உதயநிதி ஸ்டாலின் ஆகிய நான் வழங்கும் ‘நெஞ்சுக்கு நீதி’: தியேட்டரை தெறிக்கவிடும் திமுகவினர்
லடாக் பாங்காங் டிசோ ஏரியில் பாலம் கட்டும் சீனா - இந்தியாவின் பதில் என்ன?
நச்சுனு நாலு சினிமா செய்தி... உங்களுக்காகவே..!
மின் இணைப்பு கொடுப்பதாக அரசு அறிவித்தது அறிவிப்பாகத்தான் உள்ளது - கடலூர் விவசாயிகள் புகார்
ஒரிஜினலுக்கு நியாயம் செய்த ரீமேக்... 'நெஞ்சுக்கு நீதி' விமர்சனம்..!
73(54) - கோலியின் வேட்டை ஆரம்பம்(?)
பாலியல் உறவால் அதிகம் பரவும் மன்ங்கிபாக்ஸ் - உறுதிசெய்யும் 5 தரவுகள்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்