[X] Close

தேங்கிய நீரை அகற்ற போர்க்கால நடவடிக்கை: அமைச்சர் காமராஜ்

Wartime-action-to-remove-stagnant-water--Minister-Kamaraj

கனமழையால் திருவாரூர் மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் தேங்கிய தண்ணீரை அகற்ற போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

திருத்துறைப்பூண்டி அருகே மேலமருதூர் கிராமத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில், உயிரிழந்த ‌பொறியிய‌ல் பட்டதாரி வைஷ்ணவ ரூபியின் உடல்‌ திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. மருத்துவமனைக்கு நேரில் சென்ற அமைச்சர் காமராஜ், அந்தப் பெண்ணின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது குடும்பத்தினருக்கு அமைச்சர் ஆறுதல் கூறினார். பின்னர் பேசி‌ய அமைச்சர், கனமழை‌ காரணமாக, தண்ணீர் தேங்கும் பகுதிகளின் பரப்பளவு அதிகரித்துள்ளது என்றும் தேங்கி நிற்கும் தண்ணீரை வடிய வைக்க மாவட்ட நிர்வாகம் போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்வதாகவும் கூறினார்.

வீடியோ

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close