Published : 31,Oct 2017 02:08 AM
கனமழையால் மூழ்கிய பயிர்கள்: விவசாயிகள் வேதனை

கனமழை காரணமாக நாகையில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளுர் பகுதியில் கனமழையால் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேட்டூர் அணையில் இருந்து கடந்த 2ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து காலதாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டதாலும், கடைமடை பகுதிவரை நீர் சரிவர வராததாலும் சாகுபடியை விவசாயிகள் காலதாமதாக தொடங்கியுள்ளனர். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்கி மழை பெய்துவருவதால் பயிர்கள் தற்போது மழைநீரில் மூழ்கியுள்ளது. உரிய நேரத்தில் கால்வாய்கள் தூர்வாரப்படாததே இதற்கு காரணம் என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.