கருணாநிதியின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் மற்றுமொரு அதிசயத்தை காணலாம் என்றும் அவரது மருத்துவர் கோபால் தெரிவித்திருக்கிறார்.
முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதி ஓராண்டு இடைவேளைக்கு பின் மீண்டும் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார். முரசொலி நாளிதழ் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை அவர் பார்வையிட்டார். பொதுநிகழ்வில் மீண்டும் கருணாநிதி பங்கேற்றது அக்கட்சி தொண்டர்களிடையே புத்துணர்வை பாய்ச்சியுள்ளது.
திமுக தொண்டர்களின் மனதில் ஓய்வறியா தலைவராக வீற்றிருக்கும் கருணாநிதி, உடல்நலக் குறைவால் கடந்த ஓராண்டு காலமாக பொதுநிகழ்ச்சிகள் எதிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார். அவ்வப்போது மருத்துவமனை சென்று திரும்புவதையும், கட்சி நிர்வாகிகள் மற்றும் பிறகட்சித் தலைவர் உடனான சந்திப்பு குறித்து வெளியிடப்படும் புகைப்படங்களையும் மட்டும் தொண்டர்கள் கண்டு வந்தனர். சமீபத்தில், தமது கொள்ளுப்பேரனை கருணாநிதி உச்சி முகர்ந்து கொஞ்சிய காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவின. கட்சி, கொள்கைகளை தாண்டி பல்வேறு தரப்பினரையும் அந்தக் காட்சிகள் நெகிழ்ச்சியடைய செய்தன.
இந்த நிலையில், ஓராண்டு கால இடைவெளிக்கு பின் மீண்டும் தொண்டர்கள் மத்தியில் கருணாநிதி வந்திருக்கிறார். நேற்று மாலை ஆறரை மணியளவில் தமது கோபாலபுரம் இல்லத்திலிருந்து கிளம்பிய கருணாநிதி, ஏழு மணியளவில் கோடம்பாக்கம் முரசொலி அலுவலகத்தை சென்றடைந்தார். முரசொலி பவள விழாவை ஒட்டி அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை கண்டு ரசித்தார். தம்மை போன்று வடிவமைக்கப்பட்டிருந்த மெழுகுச் சிலையையும் அவர் கண்டு வியந்துள்ளார். சுமார் அரை மணி நேரம் முரசொலி அலுவலகத்தில் கருணாநிதி இருந்தார். மகள் செல்வி, திமுக செயல் தலைவர் ஸ்டாலின், துரைமுருகன், பொன்முடி, ஏ.வ.வேலு உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பின்னர் வீடு திரும்பும் முன், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கேட்டுக் கொண்டதற்கிணங்க தொண்டர்களை நோக்கி மென்சிரிப்புடன் கருணாநிதி கையசைக்கவும் செய்தார். கருணாநிதியின் மறுவரவு திமுக தொண்டர்கள் மத்தியில் மகிழ்ச்சி வெள்ளத்தை கரைபுரண்டோடச் செய்திருக்கிறது. கூடுதலாக, கருணாநிதியின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அடுத்த சில நாட்களில் மற்றுமொரு அதிசயத்தை காணலாம் என்றும் அவரது மருத்துவர் கோபால் தெரிவித்திருக்கிறார்.
திமுக தலைவர் கருணாநிதியின் வெளிவருகை, அவரது உடல்நலன் குறித்த மருத்துவரின் புதிய தகவல், தமிழக அரசியலில் புதிய நகர்வுக்கான பாதையை திறந்திருக்கிறது.
Loading More post
“எங்களுக்கு அழுத்தம் கொடுத்தாங்க”- ஓபிஎஸ் இடம் மன்னிப்பு கேட்ட திருநங்கை நிர்வாகி!
“24 மணி நேரத்தில் அதிருப்தி அமைச்சர்கள் தங்களது பதவிகளை இழப்பார்கள்” - சஞ்சய் ராவத்
”பக்கோடா விற்பதும், பஜ்ஜி போடுவதும் வேலைவாய்ப்பு அல்ல” - ப.சிதம்பரம்
”திரௌபதி குடியரசுத் தலைவர் என்றால் பாண்டவர்கள் யார்?”.. சர்ச்சையில் ராம் கோபால் வர்மா!
ரஞ்சிக் கோப்பை: மாஸ் காட்டிய ம.பி. பேட்ஸ்மேன்கள்! தோல்வியை தவிர்க்க போராடும் மும்பை!
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'