[X] Close

தீபாவளி ஷாப்பிங்... திருடர்கள் ஜாக்கிரதை.. கண்காணிப்பு தீவிரம்!

Deepavali-Festival-tight-security-in-Chennai

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் திருட்டு சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.


Advertisement

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், பொருட்கள் வாங்க மக்கள் பெருமளவில் கூடும் தியாகராய நகர் பகுதியில் 560 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேருந்து நிலையம், உஸ்மான் சாலை, ரங்கநாதன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் உயர்கோபுரம் அமைத்தும், கண்காணிப்பு கேமரா அமைத்தும் கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடவுள்ளனர். புரசைவாக்கம் நெடுஞ்சாலையில் டவுட்டன் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் 3 தற்காலிக கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து 230 காவல்துறையினர் கண்காணிக்க உள்ளனர். இதேபோன்று, வேளச்சேரியில் அதிகளவில் ரோந்து பணியில் ஈடுபடும் காவல்துறையினர் தரமணி லிங் சாலை உள்பட மக்கள் கூடும் இடங்களில் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தாம்பரம் சானிடோரியம் பேருந்து நிறுத்தத்தில் அதிகளவு காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள். இதேபோன்று, வண்ணாரப்பேட்டை, பிராட்வே பூக்கடை, அண்ணாநகர், மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வழிப்பறி உள்ளிட்ட குற்றச்செயல்களை தடுக்க காவல்துறை‌ பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 13ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை இந்த கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறையின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close