Published : 14,Feb 2023 01:38 PM

அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு முன் ஜாலி ஹேங் அவுட்! - மங்களூருவில் ‘ஜெயிலர்’ படக்குழு!

Rajinikanth-Shiva-Rajkumar-hang-out-in-Mangaluru-in-casual-outfits-ahead-of-Jailer-shoot-Viral-pic

‘ஜெயிலர்’ அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக நடிகர் ரஜினிகாந்த் மங்களூரு சென்றுள்ள நிலையில், அங்கு கன்னட நடிகர் சிவ ராஜ்குமாருடன் கலந்துரையாடும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

‘அண்ணாத்தே’ படத்தைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ரஜினியின் 169-வது படமாக தயாராகி வருகிறது. இந்தப் படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், தெலுங்கு நடிகர் சுனில், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராஃப், தமன்னா, ரெடின் கிங்ஸ்லி, ரம்யா கிருஷ்ணன், விநாயகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

image

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை, எண்ணூர், கடலூர், ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்று வந்தது. இதனைத் தொடர்ந்து ஜாக்கி ஷெராஃப், மோகன் லால் பங்குபெறும் ஆக்ஷன் காட்சிகள், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் அண்மையில் படமாக்கப்பட்டு வந்தது. இந்தப் புகைப்படங்களும் வைரலாகின.

image

ரஜினியுடன், சிவ ராஜ்குமாரின் ஆக்ஷன் காட்சிகள் மங்களூருவில் நடைபெற உள்ளது. இதற்காக நடிகர் ரஜினிகாந்த் தற்போது மங்களூரு சென்றுள்ளார். அங்கு இன்று துவங்கி ஒரு வாரம் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், படப்பிடிப்பு துவங்குவதற்கு முன் நடிகர் சிவ ராஜ்குமார் மற்றும் ரஜினிகாந்த் ஓட்டல் ஒன்றில் கேஷுவலாக கலந்துரையாடும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

image

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்