Published : 08,Feb 2023 06:49 AM

"எம்ஜிஆர் இருந்திருந்தால் அதிமுகவை ஸ்டாலினிடம் ஒப்படைத்திருப்பார்"- ஆர்.எஸ்.பாரதி பேச்சு

RS-Bharati-says-If-MGR-was-there-he-would-have-handed-over-AIADMK-to-Stalin

“எம்ஜிஆர் உயிருடன் இருந்திருந்தால் டெல்லியில் இருக்கும் 'குரங்கு, ஆப்பத்தை பங்குபோடுவதை’ பார்த்து அதிமுவை ஸ்டாலினிடம் ஒப்படைத்திருப்பார் என பிரச்சார கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, சூரம்பட்டி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், “அதிமுகவின் பொதுச் செயலாளராக இருந்த நாவலரின் நூற்றாண்டு விழாவிற்கு அதிமுகவினர் எதுவும் செய்யவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அவருக்கு ஸ்டாலின் தான் சிலை வைத்தார்.

image

எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்திருந்தால் டெல்லியில் இருக்கும் குரங்கு ஆப்பத்தை பங்குபோடுவதை பார்த்திருப்பார். மேலும் தலைவர்கள் நல்லக்கண்ணு, பேராசிரியருக்கு கொடுத்த மரியாதையை போல தனக்கும் ஸ்டாலின் தான் மரியாதை கொடுப்பார் என்று, அதிமுகவை ஸ்டாலினிடம் ஒப்படைத்திருப்பார்” என்று பேசினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்