Published : 29,Jan 2023 01:06 PM

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ள போலீசார்

Erode-East-by-election-Police-involved-in-intensive-vehicle-checks

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி காவல்துறை சார்பில் 250 போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளதால் தீவிரமாக தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் இன்று முதல் வாகன சோதனைகள் தொடங்கப்பட்டுள்ளன. 35 செக்பாய்ண்ட்களில் 250 போலீசார் இந்த வாகன சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

image

இந்நிலையில், தற்போது பன்னீர்செல்வம் பூங்கா அருகே நடத்திய சோதனையில் கட்சி கொடியுடன் வரும் கார்களை நிறுத்தி அதில் கட்டப்பட்டுள்ள கொடிகளை கழட்டவும் உத்தரவிட்ட போலீசார் வாகனங்களில் கொடிகள் சின்னங்கள் பயன்படுத்த உரிய அனுமதி ஆவணங்கள் பெற்றிருக்க வேண்டும் என்பது குறித்து அறிவுறுத்தினர்.

image

மேலும் பொருட்கள் அல்லது பணம் கொண்டு செல்லப்படுகிறா என போலீசார் தீவிரமாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு குழுவிலும் உதவி ஆய்வாளர் உள்பட 6 காவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்