[X] Close

அச்சம் என்பது மடமையடா: சசிகலா

sasikala-says-accham-yenbathu-madamaiyada

அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் அச்சம் என்பது மடமையடா என்ற எம்ஜிஆரின் புகழ் பெற்ற பாடல் வரிகளை மேற்கோள் காட்டிப் பேசினார் சசிகலா.


Advertisement

அதிமுக தலைமைக்கு எதிராக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் பொதுச்செயலாளர் சசிகலா தலைமையில் ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் பேசிய சசிகலா, அதிமுகவின் ஒற்றுமையை எந்த சக்தியாலும் உடைக்க முடியாது. யார் பின்னாலும் செல்லாமல் அதிமுகவினர் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எதிரிகள் சதி செய்கிறார்கள். அவர்களுக்கு நாம் யார் என்று காட்ட வேண்டும். துரோக செயல்களுக்கு அதிமுக தொண்டர்கள் துணைபோக மாட்டார்கள் என்று பேசினார். பேசும் போது, அதிமுகவின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆரின் புகழ்பெற்ற பாடல் வரிகளான, அச்சம் என்பது மடமையடா என்ற பாடல் வரிகளை மேற்கோள் காட்டினார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close