Published : 18,Jan 2023 06:24 PM
பந்து ஸ்டம்பில் படவேயில்லை?! சர்ச்சைக்குரியவாறு அவுட்டான ஹர்திக்! பெய்லை தட்டினாரா லாதம்?

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான போட்டியில் ஹர்திக் பாண்டியா சர்ச்சைக்குரிய வகையில் அவுட்டாகி வெளியேறியது பேசுபொருளாக மாறியுள்ளது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்குபெற்று விளையாடுகிறது. முதல் போட்டி இன்று ஹைத்ராபாத்தில் உள்ள ராஜிவ் காந்தி இண்டர்நேசனல் ஸ்டேடியத்தில் பகல் இரவு ஆட்டமாக மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது. நியூசிலாந்து அணி நட்சத்திர வீரர்கள் மற்றும் மூத்தவீரர்களான கேன் வில்லியம்சன், டிம் சவுத்தி, டிரெண்ட் போல்ட் மற்றும் இஷ் ஷோதி இல்லாமல் இளம் அணியாக களம் புகுகிறது. இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இரட்டை சதம் விளாசிய சுப்மன் கில்!
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியின் ஓபனர்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் சிறப்பான தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். இந்த போட்டியில் நல்ல தொடக்கத்தை கொடுத்த ரோகித் சர்மா அதை பெரிய ரன்களாக மாற்றாமல் ஏமாற்றமளித்து வெளியேறினார். பின்னர் அடுத்தடுத்து களமிறங்கிய கோலி, இஷான் கிஷன், சூர்யகுமார் போன்ற வீரர்கள் வெளியேறினாலும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மன் கில் ஒருநாள் போட்டி வரலாற்றில் தனது 3ஆவது சதத்தை இரட்டை சதமாக மாற்றி அசத்தினார். சச்சின் டெண்டுல்கர், விரேந்திர சேவாக், ரோகித் சர்மா, இஷான் கிஷனை தொடர்ந்து 5ஆவது இந்திய வீரராக இரட்டை சதமடித்து அசத்தினார். சுப்மன் கில்லின் 208 ரன்கள் என்ற இரட்டை சதத்தின் உதவியால் இந்திய அணி 349 ரன்களை குவித்தது.
இந்நிலையில் 5ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹர்திக் பாண்டியா 38 பந்துகளில் 28 ரன்கள் என்ற நிலையில் இருந்தபோது, 40ஆவது ஓவரில் டாரில் மிட்சல் வீசிய பந்தை எதிர்கொண்ட போது சர்ச்சைக்குரிய வகையில் அவுட் கொடுக்கப்பட்டு வெளியேறினார். போட்டியை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி வர்ணனையாளர்கள் உட்பட அனைவருக்கும் மூன்றவது நடுவர் அவுட் கொடுத்த விதம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஹர்திக் பாண்டியாவின் இந்த வெளியேற்றமானது அம்பயரின் மோசமான அறிவிப்பு என்று தெரிவித்து வருகின்றனர் கிரிக்கெட் ரசிகர்கள்.
ஸ்டம்ப் - பந்து இடையே இவ்வளவு கேப் இருப்பது போல் தெரியுதே?
ஹர்திக் பாண்டியா எதிர்கொண்ட அந்த டெலிவரியில், கட் ஷாட் அடித்தபோது, பந்தானது பேட்டில் படாமல் ஆஃப் ஸ்டம்பிற்க்கு மேலாக, பெய்லில் படாமல் விக்கெட் கீப்பர் கைகளுக்கு சென்றது போல் இருந்தது. ஆனால் பெய்ல் எந்தவித அதிரிவின்றி ஸ்டம்பின் முன்பக்கமாக விழுந்தது. அவுட் என கேட்கப்பட்டதின் விளைவாக, இது 3ஆவது நடுவரின் முடிவுக்கு கொண்டு செல்லப்பட்டது. விக்கெட்டிற்கான பந்தின் ரீப்ளேவில், பந்தானது பேட்டை உராசாமல் கீப்பரை நோக்கி செல்கிறது, எந்த அதிர்வுகளும் அறியப்படவில்லை, மேலும் ஸ்டம்பிற்கும் பந்திற்க்கும் பெரிய இடைவெளி இருப்பதும் நன்றாக தெரிகிறது. பந்தை பிடிப்பதற்கு முன்னர் விக்கெட் கீப்பர் லாதம் பெய்ல்ஸோடு கிளவ்வை ஒட்டியிருப்பது போன்ற காட்சி நன்றாகவே விசுவலில் தெரிகிறது. அவர் பந்தை பிடித்துவிட்டு கிளவ்ஸை எடுத்தபிறகு தான் பெய்ல்ஸ் ஸ்டம்ப்பில் இருந்து விழுகிறது.
பெய்ல் பின்னால் தானே விழும்!
மேலும் பந்து ஸ்டம்பில் பட்டிருந்தால் பெய்ல் பின்னால் தானே விழுந்திருக்க முடியும். ஆனால், இங்கு பெய்ல்ஸானது ஸ்டம்ப்பின் முன் பக்கத்தில் விழுகிறது. இதிலிருந்து பெய்ல்ஸானது கிளவ்வுடன் இருந்த மோதலால் தான் விழுந்தது என தெரிகிறது. ஆனால் 3ஆவது அம்பயர் அவுட் கொடுத்த விதம் எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவுட் கொடுக்கப்பட்டதால் ஹர்திக் பாண்டியா மகிழ்ச்சியில்லாமல் விரக்தியில் வெளியேறினார். ஹர்திக் பாண்டியாவின் இந்த விக்கெட் நியூசிலாந்து அணிக்கு போனஸ்ஸாகவே பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இது எப்படி அவுட்டென அறிவிக்கப்பட்டது, அம்பயரின் கண்மூடித்தனமான அறிவிப்பு என்றும், இந்தியாவில் 2023 உலகக்கோப்பை வரவிருக்கிறது, இப்படிபட்ட மோசமான அம்பயர்களை வைத்திருப்பது சரியானதாக இருக்காது என்றும் ரசிகர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
How in the world is this out ??? Clearly Not out. This is so Average and Poor Umpiring.
— Neerag Heda (@theneerag_heda) January 18, 2023
With the World Cup coming to India, we can't have this type of umpires.#HardikPandya#INDvNZ#shubhmangill#AskStarpic.twitter.com/1J73rgqIun
இன்னொரு ரசிகர், “ஒருவேளை ஹர்திக் இருந்த இடத்தில் வங்கதேச அணியின் ஷாகிப் அல் ஹசன் இருந்திருந்தால் இந்நேரம் அம்பயர் ஹாஸ்பிடலில் இருந்திருப்பார்” என்று விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
Imagine Shakib Al Hasan in place of Hardik Pandya
— i@m•Satya (@TechGen18) January 18, 2023
Umpire would be on the hospital bed now
This decision was totally unfair, as #HardikPandya being Not Out was given out in #INDvsNZ. pic.twitter.com/6C8OKELROY
— Hardy (@YAC_JK) January 18, 2023