Published : 03,Jan 2023 05:10 PM
அஜித்தின் ‘துணிவு’ படத்திலிருந்து நீக்கப்பட்ட 13 கெட்ட வார்த்தைகள்.. ரிலீஸ் தேதி இதுதானா?

நடிகர் அஜித்தின் ‘துணிவு’ படத்தில் 10-க்கும் மேற்பட்ட கெட்ட வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளதுடன் சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஹெச் வினோத் இயக்கத்தில் அஜித், மஞ்சுவாரியர், சமுத்திரக்கனி, ஜான் கொக்கன், பிரேம், ஜி.எம். சுந்தர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. ‘வலிமை’ படத்திற்குப் பிறகு இந்தப் படம் வரவுள்ளதால், அஜித்தின் ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர். இந்நிலையில், இந்தப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் படத்தின் ரன்னிங் டைம், இரண்டு மணி நேரம் 25 நிமிடங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், படத்தில் வரும் ‘வடக்கன்ஸ்’ என்று இடம்பெற்ற வசனம் மாற்றப்பட்டதோடு, ‘காசேதான் கடவுளடா’ பாடலில் இடம்பெற்ற 'காந்திக்கும்' என்ற வார்த்தை மியூட் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும், 13 கெட்ட வார்த்தைகள் நீக்கப்பட்டுள்ளது. குழந்தை ஒன்றை துன்புறுத்தும் காட்சியும் குறைக்கப்பட்டுள்ளது.
‘துணிவு’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவராதநிலையில், பிரபல திரையரங்கு நிறுவனமான பிவிஆர் சினிமாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ ‘துணிவு’ ட்ரெய்லர் வெளியாகிவிட்டது. ட்ரெய்லர் பற்றிய உங்கள் கருத்துக்களைத் தெரிவியுங்கள்” என்று கூறியுள்ளது. அத்தோடு, ‘பி.வி.ஆர் திரையரங்குகளில் ஜனவரி 11 முதல் வெளியாகிறது’ என்று துணிவு வெளியீட்டுத் தேதியைக் குறிப்பிட்டுள்ளது. இதனால் ஜனவரி 11-ம் தேதி தான் உறுதியான தேதியா என்று ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.
The trailer to #Thunivu has dropped, and the hype is at an all-time high. What did you think about the trailer? Share your thoughts in the comments!
— P V R C i n e m a s (@_PVRCinemas) January 2, 2023
Thunivu, coming to #PVR on 11th Jan’23.#ThunivuPongal#NoGutsNoGlory#Ajithkumar#HVinoth#ThalaAjith#Ajithpic.twitter.com/qqBQMHhJbG
மேலும், விஜய்யின் ‘வாரிசு’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாக உள்ளதாக தகவல் பரவி வரும் நிலையில், அந்த ட்ரெய்லர் வந்தப் பிறகே, ‘துணிவு’ படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பாளர் போனி கபூர் உறுதி செய்யவுள்ளாகவும் செய்திகள் கசிந்து வருகிறது.