Published : 17,Nov 2022 05:48 PM

பைக் பிரியரா நீங்கள்? புதிய வெர்சனுடன் QJ Motor-ன் ரெட்ரோ & ஸ்போர்ட்ஸ் மாடல் அறிமுகம்

---A-New-Update-for-Bike-Riders--------Launch-of----Retro---Sports----Bikes-with-New-Update

க்யூஜே பைக் மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய பைக் சந்தையில், ஸ்பெசல் அப்டேசனுடன் புதிய வெர்சன்களாக நான்கு வகையான பைக்குகளை அறிமுகம் செய்துள்ளது.

சீன மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான QJ மோட்டார், இந்தியாவில் விற்பனை செய்யப்படும் மோட்டார்சைக்கிள்களின் விலைப்பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் QJ மோட்டார் SRC 250, SRC 500, SRV 300 மற்றும் SRK 400 ஆகிய நான்கு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்கிறது.

image

SRC 250 மற்றும் SRC 500 மோட்டார் சைக்கிள்கள் க்யூஜே மோட்டரின் 'கிளாசிக்' ரெட்ரோ மாடல் பைக்குகளாகும். அதில் அடுத்த வெர்சனாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எஸ்ஆர்வி பைக்குகள் ”ரோட்ஸ்டர்” மற்றும் எஸ்ஆர்கே பைக்குகள் நேக்கட் ”ஸ்போர்ட்ஸ்” வகை பைக்குகள் ஆகும். க்யூஜே மோட்டார்ஸின் இந்த நான்கு மாடல் பைக்களையும் ”ஆதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியாவின் மோட்டோ வால்ட்” மல்டி பிராண்ட் ஷோரூம்களில் இருந்து பெறலாம்.

SRC 250 மாடல்

image

க்யூஜே மோட்டார்ஸின் கிளாசிக் ரெட்ரோ பைக் வகையில் முதலாவதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த மாடல், 249சிசி கெப்பாசிடியோடு 17.1bhp மற்றும் 17Nm டார்க் பவருடன் கூடிய இன்லைன்-இரட்டை இன்ஜின் கொண்ட பைக்காகும்.

ஸ்போர்ட்ஸ் ஸ்போக் வீல்கள், ரவுண்ட் ஹெட்லைட்கள், இண்டிகேட்டர்கள் மற்றும் டூயல்-சேனல் ஏபிஎஸ் உடன் டிஸ்க் பிரேக்குகள் வசதியுடன் இடம்பெறுகிறது. SRC 250 மாடல் பைக் விலைகள் ரூ.1.99 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.

SRC 500 மாடல்

image

க்யூஜே மோட்டார்ஸின் கிளாசிக் ரெட்ரோ பைக் வகையில் SRC 500 பெரிய பைக் மாடலாகும். ஏர்-கூல்டு 480cc சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் உடன் 25.1bhp மற்றும் 36Nm டார்க் பவருடன் அதிக எஃபிசியன்சி கொண்ட பைக்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்பெசல் அப்டேசனாக ரெட்ரோ ஸ்போர்ட்ஸ் பைக் வகையில் டூயல்-டோன் பெயிண்ட் ஸ்கீம்கள், அலாய் வீல்கள் மற்றும் டியூவல் சேனல் ஏபிஎஸ் உடன் டிஸ்க் பிரேக்குகள் இடம்பெற்றுள்ளன. SRC 500 மாடல் பைக் விலைகள் ரூ.2.69 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.

SRV 300 மாடல்

image

க்யூஜே மோட்டார்ஸின் ரோட்ஸ்டர் வகை பைக்கான இது இந்திய விற்பனையில் ஒரு ஆஃபரிங்க் மாடலாகும். QJ மோட்டார் SRV 300 ஆனது 296சிசி கெப்பாசிட்டியுடன் லிக்விட்-கூல்டு வகை V-ட்வின் இன்ஜின் பைக்காகும். இது 29.8bhp மற்றும் 26Nm டார்க் பவருடன், 6-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் அமைந்துள்ளது.

SRV 300 அப்சைடு-டவுன் வகை ப்ரண்ட் ஃபோர்க்குகள், இரட்டை ரியர் ஷாக்ஸ், டிஸ்க் பிரேக்குகள் மற்றும் டூயல்-சேனல் ஏபிஎஸ் உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. SRV 300 மாடல் பைக் விலையானது ரூ.3.59 லட்சம் ஆகும்.

SRK 400 மாடல்

image

க்யூஜே மோட்டர்ஸின் இந்திய அறிமுகத்தில் இருக்கும் ஒரே ஒரு ஸ்போர்ட்ஸ் பைக் SRK 400 மட்டும் தான். நேக்கட் ஸ்போர்ட்ஸ் பைக்கான SRK 400, 400cc கெப்பாசிட்டியோடு 40.3bhp மற்றும் 37Nm அதீத டார்க் பவருடன் கூடிய இரட்டை பேர்லல் இன்ஜின் உடன் ஒரு ஸ்பெசல் புராடக்டாக அறிமுகமாகியுள்ளது. மற்றும் இன்ஜின் 6 கியர்களுடன் கூடியது.

QJ மோட்டார் SRK 400, முன்புறம் USD ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் உடன் அமைந்துள்ளது. நேக்கட் ஸ்போர்ட்ஸ் பைக்கில் முன்பக்கத்தில் இரட்டை டிஸ்க்குகளும், பின்புறத்தில் ஒற்றை டிஸ்க்குகளும் இரட்டை சேனல் ஏபிஎஸ் மூலம் உதவுகின்றன. SRK 400 மாடல் பைக்களின் விலையானது ரூ.3.59 லட்சத்திலிருந்து தொடங்குகிறது.

QJ மோட்டார் 4 அறிமுக பைக்குகள் விலைப்பட்டியல்

image

இந்திய பைக் உலகத்தில் ஒரு புதிய உதயம் QJ மோட்டார்

image

க்யூஜே மோட்டார் இந்தியாவிற்குள் தனது முதல் அறிமுக முயற்சியிலேயே மிகவும் சுவாரஸ்யமான மோட்டார் சைக்கிள்களை கொண்டு வந்துள்ளது. நடுத்தர அளவிலான ரெட்ரோ பைக்குகள் மற்றும் ஒரு ஸ்போர்ட்ஸ் பைக்குடன், QJ மோட்டார் இந்திய சந்தையில் ஒரு ஸ்பெசலாக தெரிகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்