Published : 13,Nov 2022 10:52 AM
தமிழகம் ஆந்திராவில் பெய்யும் கனமழை: பாலாற்றில் வெள்ளப்பெருக்கு – போக்குவரத்து துண்டிப்பு

தமிழக - ஆந்திர நீர்ப்பிடிப்பு பகுதியில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக கனமழை பெய்து வருவதால் பாலாறு மற்றும் அதன் கிளையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகம், ஆந்திரா மற்றும் திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பாலாறு மற்றும் அதன் கிளை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில், வாணியம்பாடி ஓம் சக்தி கோவில் அருகே உள்ள தரைப்பாலம் கிளையாற்றின் வெள்ளத்தால் முற்றிலுமாக மூழ்கியுள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு தரைப் பாலத்தை கடந்து செல்ல காவல் துறையினர் தடை விதித்துள்ளனர்.