[X] Close

பேரறிவாளன் பரோலை நீடிக்க சீமான் கோரிக்கை

seemam-met-to-perarivalan

ஜோலார்பேட்டை சென்று பேரறிவாளனை அவரது வீட்டில் வைத்து சந்தித்தார் சீமான். 

ராஜூவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை கைதியாக இருப்பவர் பேரறிவாளன். அவரது விடுதலையை வலியுறுத்தி, பல்வேறு தரப்புகளில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த மாதம்தான் பேரறிவாளனுக்கு முதல் முறையாக பரோல் கிடைத்தது. தற்சமயம் வேலூர் சிறையில் இருந்து பரோலில் வந்துள்ள பேரறிவாளனை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் நடிகர் மயில்சாமி இன்று சந்தித்து பேசினர்.

இச்சந்திப்பை தொடர்ந்து பேரறிவாளன் பரோலை ஒருமாதம் நீட்டிக்க வேண்டும் என்று சீமான் கோரிக்கை எழுப்பியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஜோலார்பேட்டையில் உள்ள பேரறிவாளன் வீட்டிலேயே சீமான் தங்கினார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close