Published : 07,Sep 2022 04:30 PM
'உழைப்புக்கும் வயதில்லை' - ரயிலில் ஸ்நாக்ஸ் விற்று கவனம் ஈர்த்த 'மாடர்ன்' மூதாட்டி

மும்பை உள்ளூர் ரயிலில் வயதான பெண் ஒருவர் தின்பண்டங்கள் விற்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
டெல்லி மகளிர் ஆணையத் தலைவர் ஸ்வாதி மாலிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள வீடியோ ஒன்று நெட்டிசன்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. அந்த வீடியோவில் மும்பை உள்ளூர் ரயிலில் வயதான பெண்மணி ஒருவர் சுடிதார் அணிந்து பயணிகளுக்கு நொறுக்குத்தீனி விற்கிறார். 'மாடர்ன்' தோரணையுடன் இருக்கும் அந்த வயதான பெண் பயணிகளிடம் கனிவாகப் பேசி தான் கொண்டு வந்திருக்கும் ஸ்நாக்ஸ்களை விற்கிறார்.
किसी की ज़िंदगी आराम है, संघर्ष किसी की ज़िंदगी का नाम है। ये महिला और इनके जैसे हज़ारों लोग जो मेहनत कर दो वक्त की रोटी कमाते हैं, हो सके तो उनसे सामान ज़रूर खरीदें। pic.twitter.com/zKXU3oIE8w
— Swati Maliwal (@SwatiJaiHind) September 5, 2022
தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் இருக்கும் அந்த மூதாட்டியை நெட்டிசன்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். சிலர் அந்த மூதாட்டிக்கு தேவையான உதவிகளை செய்வதற்காக அவருடைய தொடர்பு விபரங்கள் கேட்டு பதிவிட்டுள்ளனர்.
இதையும் படிக்க: `அச்சோ, உனக்கு பசிக்குதா?!’- குட்டியானை பசியை போக்க குழந்தைகள் செய்த க்யூட்டான விஷயம்!