Published : 30,Aug 2022 10:55 PM

கடைசி நேரத்தில் சிக்ஸர் மழை பொழிந்த நஜிபுல்லா! வங்கதேசத்தை சாய்த்தது ஆப்கானிஸ்தான்!

Rashid-Khan--Mujeeb-ur-Rahman-brilliant-bowling-Afghanistan-beats-Bangladesh

ஆசியக் கோப்பையில் இன்று நடைபெற்ற போட்டியில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஓப்பனர்களாக களமிறங்கிய முகமது நைம், அனாமுல் ஹக் ஆகிய இருவரையும் ஒற்றை இலக்கத்தில் வெளியேற்றி அதிர்ச்சி அளித்தார் முஜீப் உர் ரகுமான்.

Asia Cup 2022 Bangladesh vs Afghanistan 3rd Match Group B Live Cricket Score Hindi Commentary - AFG vs BAN Asia Cup 2022 Live: अफगानिस्तान का पहला विकेट गिरा, कप्तान शाकिब को मिली सफलता

அடுத்ததாக களமிறங்கிய கேப்டன் ஷகிப் அல் ஹசனையும் வெறும் 11 ரன்கள் எடுத்த நிலையில் க்ளீன் போல்டாக்கினார் முஜிப் உர் ரகுமான். இதையடுத்து ரஷித் கான் தனது அதிரடி வேட்டையை துவக்கினார். முஷ்பிகுர் ரஹீம், அஃபிஃப் ஹொசைன், மஹ்முதுல்லாஹ் ஆகிய மூவரையும் ரஷித் கான் வரிசையாக பெவிலியன் அனுப்பி வைக்க பரிதாப நிலைக்குச் சென்றது வங்க தேசம்.

இறுதியாக மொசாடெக் ஹொசைன் நிலைத்து நின்று 4 பவுண்டரி, 1 சிக்ஸர் விளாசி 48 ரன்களைக் குவிக்க, 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 127 ரன்களை குவித்தது வங்கதேசம். 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய ஆப்கானிஸ்தான் துவக்கம் முதலே நிதானமாக விளையாடத் துவங்கியது.

Cricket Stats - Bangladesh vs Afghanistan, Asia Cup, 3rd Match, Group B Cricket Insights | ESPNcricinfo.com

ஆப்கன் அணியின் ஓப்பனர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 11 ரன்களில் நடையைக் கட்ட, மற்றொரு ஓப்பனர் ஹஜ்ரத்துல்லாஹ் ஜஸாய் 23 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். முகமது நபி 21 ரன்களில் அவுட்டாக 13 ஓவர்கள் முடிவில் 62-3 என்ற நிலையில் தடுமாறத் துவங்கியது. 15 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அண்இ 3 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்களை எடுத்தது.

Live Streaming Of Bangladesh Vs Afghanistan, Asia Cup Cricket 2022: Watch Match 3, Group B Live

கடைசி 5 ஓவர்களில் 52 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இப்ராகிம் சத்ரன் மற்றும் நஜிபுல்லா சத்ரன் ஆகிய இருவரும் களத்தில் தோல்வியை போராடுவார்கள் என்றே தோன்றியாது. ஆனால், அடுத்த மூன்று ஓவர்களில் இருவரும் மேஜிக் செய்தார்கள். சிக்ஸர், பவுண்டரி மழையை பொழிந்தனர். ஒவ்வொரு ஓவரில் சிக்ஸர்கள் பறக்கவிட்டார் நஜிபுல்லா. இதனால், 18.3 ஓவர்களிலேயே 131 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. 

இப்ராஹிம் ஸத்ரான் 41 பந்துகளில் 4 பவுண்டரி உட்பட 42 ரன்களும், நஜிபுல்லா ஸத்ரான் 17 பந்துகளில் 6 சிக்ஸர்கள் உட்பட 43 ரன்கள் குவித்தார். இந்த ஜோடி 69 ரன்களுக்கு பார்ட்னர் ஷிப் அமைத்தது. ஆப்கானிஸ்தான் அணி தனது இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்