Published : 03,Aug 2022 05:33 PM

குடிநீர் பாட்டில் தயாரிக்க ஆவின் திட்டம்

Aavin-project-to-make-water-bottle

குடிநீர் பாட்டில் தயாரிக்க ஆவின் நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களுக்கு தகவல் அளித்த பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர், தமிழ்நாட்டில் ஆவின் நிறுவனம் தண்ணீர் பாட்டில்கள் தயாரித்து விற்பனை செய்யவிருப்பதாக தெரிவித்தார். ஆவின் தயாரிக்கும் 28 யூனிட்களிலும் தண்ணீர் சுத்திகரிப்பு பிளாண்ட் உள்ளதாகவும், இங்கிருந்து குடிநீர் பாட்டில் தயாரிக்க ஆவின் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் 1 லிட்டர் மற்றும் அரை லிட்டர் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்படவுள்ளதாகவும், தண்ணீர் பாட்டில் மற்றும் லேபிள் போன்ற வடிவமைப்புகளை இறுதி செய்யும் பணி நடைபெற்று வருவதாகவும், பல தொடர் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

image

மேலும் ஆவின் பாக்கெட்டுகளில் அரசு விளம்பரங்கள் இடம் பெற்று வரும் நிலையில், இனி சினிமா படங்களின் விளம்பரங்களை வெளியிடுவது குறித்தும் பரிசீலிக்கப்போவதாக தெரிவித்தார். இதுகுறித்து முதலமைச்சர் இறுதி முடிவை அறிவிப்பார் எனவும் குறிப்பிட்டார்.

ஆவின் பால் விற்பனை கடந்த ஆட்சியில் 26 லட்சம் லிட்டராக இருந்த நிலையில் தற்போது 28 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது என பேசிய அவர் தீபாவளி பண்டிகைக்காக ஆவின் விற்பனையை அதிகரிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்