Published : 23,Jun 2022 09:30 PM

‘கதைய மறைக்கலாம்... பயத்தை..’ - சுதீப்பின் ‘விக்ராந்த் ரோணா’ ட்ரெயிலரை வெளியிட்ட தனுஷ்

Kichcha-Sudeep-s-Vikrant-Rona-trailer-out-Dhanush-to-Salman-Khan-shared-the-trailer-and-tweeted

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகியுள்ள பிரபல கன்னட நடிகர் கிச்சா சுதீப்பின் ‘விக்ராந்த் ரோணா’ திரைப்படத்தின் ட்ரெயிலரை பிரபலங்கள் பலரும் இன்று வெளியீட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர், எழுத்தாளர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைகளை வெளிப்படுத்தி வருபவர் அனுப் பந்தாரி. ‘ரங்கிதரங்கா’, ‘ராஜரதா’ உள்ளிட்ட படங்களை தொடர்ந்து இவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘விக்ராந்த் ரோணா’. இந்தப் படத்தில் பிரபல தென்னிந்திய நடிகரான கிச்சா சுதீப், நிரூப் பந்தாரி கதாநாயகர்களாக நடித்துள்ளனர். பிரபல பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்ணான்டஸ் மற்றும் நீதா அசோக் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

கொரோனா காரணமாக மிக நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்த இந்தப் படம், பேண்டஸி ஆக்ஷன் அட்வென்சர் படமாக உருவாகியுள்ளது. 3டி தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையே உருவாகியுள்ள ‘விக்ராந்த் ரோணா’ படத்தின் ட்ரெயிலர் இன்று வெளியாகியுள்ளது.

image

பசுமை நிறைந்த காட்டில், இருட்டான சூழ்நிலையில், த்ரில்லர் கதைக்களத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ட்ரெயிலர் பார்ப்பவர்களை மிரளச் செய்கிறது. தமிழில் நடிகர் தனுஷ், இந்தியில் சல்மான்கான், ரிதேஷ் தேஷ்முக், மலையாளத்தில் துல்கர் சல்மான், கன்னடத்தில் ராம்கோபால் வர்மா, தனஞ்செயா, தெலுங்கில் ராம் சரண் ஆகிய பிரபலங்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் படத்தின் ட்ரெயிலரை வெளியிட்டுள்ளனர்.

image

பான் இந்தியா படமாக உருவாகியுள்ள இந்தப் படம், ‘கே.ஜி.எஃப். 2’, ‘777 சார்லி’ ஆகியப் படங்களுக்குப் பிறகு சர்வதேச அளவில் வரவேற்பு கிடைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்தப் படத்தை கிச்சா கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார். வில்லியம் டேவிட் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆஷிக் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்