Published : 22,Jun 2022 03:59 PM

சென்னை: இரவில் மட்டும் ஆட்டோ ஓட்டும் அபிபென்ஷா... ஏன் தெரியுமா..?

சென்னையில் இரவுநேர வாழ்க்கை என்பது பலதரப்பட்ட மக்களை கொண்டது. அப்படிப்பட்ட மனிதர்களில் ஒருவர்தான் பெண் ஆட்டோ ஓட்டுநர் அபிபென்ஷா. சென்னையில் இரவு நேரங்களில் மட்டும் ஆட்டோ ஓட்டும் அபிபென்ஷா, அப்போதுதான் போக்குரத்து நெரிசல் சற்று குறைவாக இருப்பதாகக் கூறுகிறார். அத்துடன் பார்வைச் சவால் கொண்ட தாயாரையும் ஆட்டோவில் வைத்தே அழைத்துச் செல்கிறார். திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து வரும் அவர், வாடகை ஆட்டோவைதான் தற்போது பயன்படுத்தி வருகிறார். அரசு சொந்த ஆட்டோ வாங்க உதவி புரிந்தால் உதவியாக இருக்கும் என்றும் கோரிக்கை வைக்கிறார். ஆட்டோ ஓட்டுநர் அபிபென்ஷாவின் முழு பேச்சை வீடியோவில் காணலாம்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்