“தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் ஆட்சியை பார்த்து காப்பியடித்து உத்தரப்பிரதேச தேர்தலில் 60 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு இலவச பேருந்து பயணம் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்” என திண்டுக்கல்லில் நடைபெற்ற ஓர் ஆண்டு திமுக அரசின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் ஆர் எஸ் பாரதி பேசியுள்ளார்.
தமிழக அரசின் ஓர் ஆண்டு சாதனையை விளக்கும் பொதுக்கூட்டம் திண்டுக்கல் நாகல்நகரில் நேற்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்கு திமுக கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில்குமார் தலைமை தாங்கினார் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, தமிழக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
அந்தக் கூட்டத்தில் ஆர் எஸ் பாரதி பேசுகையில், “தமிழக முதல்வரின் ஓராண்டு சாதனை ஆட்சியில் பெண்கள் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளார். இதனை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களும் பாராட்டுகின்றன. தமிழகத்தில் நடைபெற்று வரும் திராவிட மாடல் ஆட்சியைப் பார்த்து காப்பியடித்து, பிரதமர் நரேந்திர மோடி உத்தரபிரதேசத்தில் மீண்டும் பிஜேபி ஆட்சிக்கு வந்தால் 60 வயதுக்கு மேற்பட்டோர் அனைவருக்கும் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம் என அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க... எச்சில் துப்பியதாக குற்றச்சாட்டு: நடத்துநருடன் சண்டையிட்ட காவலர் சஸ்பெண்டு
கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சர்கள் செய்த ஊழல்கள் தொடர்பான விசாரணை ஆரம்பமாகி உள்ளது. குறிப்பாக கோடநாடு வழக்கில் தோண்ட தோண்ட புதிய புதிய விஷயங்கள் வந்து கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து இந்த விவகாரத்தில் எந்தெந்த அமைச்சர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர் என்பது மக்கள் மன்றத்திற்கு தெரியவரும். பிள்ளை பிடிக்கும் வேலையை பாஜக-காரர்கள் செய்து வருகின்றனர். காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தனின் மகள் தமிழிசையை பிடித்து பாஜக-வில் சேர்த்துள்ளனர். அதேபோல் தற்போது திருச்சி சிவாவின் மகனை பிடித்து பாஜக சேர்த்துள்ளனர்.
தமிழகத்தில் நிலையான கொள்கை இல்லாமல் பாஜக நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தேவையில்லாமல் கலவரத்தை தூண்டும் வகையில் பாஜக தலைவர் அண்ணாமலை பேசி வருகிறார். இவ்வாறு அவர் பேசி வருவது சரியல்ல. அவருக்கு எச்சரிக்கை விடுகின்றேன். பழைய திமுக காரன் மீண்டும் வந்து விடுவான். எனவே எச்சரிக்கையாக இருந்து கொள்ளும்படி தெரிவித்துக் கொள்கின்றேன். அண்ணாவைப் பற்றி தவறுதலாக கிருபானந்த வாரியார் பேசினார். இதன் காரணமாக அவர் எங்கும் வெளியே சென்று பேச முடியாத நிலை உருவானது. இதே நிலைமைதான் ஏற்படும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக் கொள்கின்றேன்” என பேசினார்.
Loading More post
ஆட்டோ மீது திடீரென அறுந்து விழுந்த மின் கம்பம்... 8 பேர் உடல் கருகி உயிரிழப்பு
‘மழை பெஞ்சா என்ன? சிறுவனை நாங்க கைவிடமாட்டோம்’- ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் மீட்பு
Fact Check: ரசிகருக்கான பிறந்த நாள் வாழ்த்து கடிதத்தில் தேதியை மாற்றி எழுதினாரா அஜித்?
உத்தவ் தாக்கரே ராஜினாமாவால் பாஜகவினர் கொண்டாட்டம் - முதல்வராகிறார் ஃபட்னாவீஸ்
தமிழ்நாடு போலீஸாக விருப்பமா? உங்களுக்காக இன்று வருகிறது அப்டேட்
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix