Published : 30,Apr 2022 03:22 PM

முதல் டீம் ஆக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா குஜராத்! டாஸ் வென்ற ஆர்சிபி பேட்டிங் தேர்வு!

Royal-Challengers-Bangalore-opt-to-bat-against-gujarat-titans

இன்றைய ஐபிஎல் போட்டியில் பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்யும் முனைப்பில் குஜராத் அணியும், பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கும் உத்வேகத்தில் பெங்களூரூ அணியும் களமிறங்குகின்றன.

ஐபிஎல் 2022 தொடரில் மும்பை பிராபோர்னில் இன்று நடக்கும் 43-வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் வெற்றிகரமான அணியாக வலம் வரும் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி 7 வெற்றி, ஒரு தோல்வி என்று 14 புள்ளிகளுடன் கம்பீரமாக முதலிடத்தில் பயணிக்கிறது. இன்னும் ஒரு வெற்றி பெற்றால் அந்த அணியின் பிளே ஆட் வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகி விடும்.

GT vs RCB Prediction Playing XI IPL 2022: बैंगलोर की पस्त बैटिंग में जान भरेगा ये खिलाड़ी, गुजरात से टकराने के लिए होगा बदलाव | TV9 Bharatvarsh

பெங்களூரு அணியின் பேட்ஸ்மேன்கள் நிலையற்ற ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது அந்த அணிக்கு பெரும் பலகீனம். அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒருசேர மிரட்டினால் மட்டுமே பலம் வாய்ந்த குஜராத்தின் வீறுநடைக்கு பெங்களூரு அணியால் முட்டுக்கட்டை போட முடியும். ஐ.பி.எல். போட்டியில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

பிளே ஆஃப் கட்டத்தை நோக்கி இரு அணிகளும் முழு உத்வேகத்துடன் விளையாடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது. டாஸ் வென்ற பெங்களூரூ அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இரு அணிகளின் ஆடும் லெவன்: 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் : ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷாபாஸ் அகமது, மஹிபால் லோம்ரோர், வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட்.
குஜராத் டைட்டன்ஸ் : சுப்மான் கில், விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா (கேப்டன்), சாய் சுதர்சன், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், பிரதீப் சங்வான், அல்சாரி ஜோசப், லாக்கி பெர்குசன், முகமது ஷமி

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்