ரோஹிங்யா விவகாரம் மியான்மருக்கு மிகப்பெரிய சவால் என்று அந்நாட்டின் நிர்வாகத் தலைவர் ஆங் சான் சூச்சி தெரிவித்துள்ளார்.
மியான்மரின் மேற்கு எல்லையோரத்தில் அமைந்திருக்கும் மாநிலம் ராகினே எனப்படும் அராக்கன். பௌத்தர்கள் பெருமளவில் வசிக்கும் இந்தப் பகுதியில், ரோஹிங்யா என்ற இனத்தவரும் கணிசமாக வாழ்கின்றனர். 1948 ஆம் ஆண்டு பர்மா விடுதலை பெற்ற பிறகும், 1971-இல் வங்கதேச விடுதலைப் போர் நடந்தபோதும், ராகினே பிராந்தியத்தில் குடியேறியவர்கள் இவர்கள். இவர்கள் அனைவரும் இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றுபவர்கள்.
மியான்மர் பாதுகாப்புப் படைகளும், சில பௌத்த மதக் குழுக்களும் ரோஹிங்யா மக்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறார்கள். சட்டவிரோதமாக அடைத்து வைத்தல், சித்திரவதை, கொத்தடிமை முறை என பல வழிகளிலும் ரோஹிங்யா மக்களுக்கு எதிராக அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.
ரோஹிங்யா இனத்தைச் சேர்ந்த மக்கள் வங்கதேசம் உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு அகதிகளாகத் தஞ்சம் புகுந்துள்ளனர். வங்கதேசத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் மியான்மர் அகதிகள் இருக்கின்றனர். இதுவரை சுமார் 3 லட்சம் பேர் மியான்மரிலிருந்து வெளியேறிவிட்டதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
இந்நிலையில் பிரதமர் மோடி மியான்மர் சென்றிருக்கிறார். அவருடன் தனது தந்தையான ஆங் சானின் நினைவிடத்துக்கு சென்ற ஆங் சான் சூச்சி, பல்வேறு விவகாரங்கள் குறித்துப் பேசினார். இஸ்லாமியர் வசிக்கும் ராகினே பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ரோஹிங்கியா விவகாரம் மியான்மருக்கு மிகப்பெரிய சவால் என்றும் அவர் கூறினார்.
Loading More post
“என்னிடம் ஏன் இந்தக் கேள்வியை கேட்கிறீர்கள்?” - முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆவேசம்
பிளே ஆஃப் வாய்ப்பு யாருக்கு? டெல்லிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் பேட்டிங் தேர்வு!
ரோகித், கோலியின் மோசமான ஃபார்ம் குறித்து கவலையில்லை - பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி
பாகிஸ்தானில் இரண்டு சீக்கியர்கள் சுட்டுக் கொலை - இந்தியா கடும் கண்டனம்
சர்ச்சைக்கு மத்தியில் தாஜ்மஹாலின் பூட்டிய அறைகளின் படங்களை வெளியிட்டது தொல்லியல் துறை!
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?