Published : 02,Apr 2022 12:38 PM

மானாமதுரை: 1 ஆம் வகுப்பு மாணவியின் நேர்மை... கௌரவப்படுத்திய தலைமையாசிரியர்

Manamadurai-Do-you-know-why-the-headmaster-honored-the-1st-class-student

மானாமதுரையில் ஆசிரியர் தவறவிட்ட 50 ருபாயை எடுத்துக் கொடுத்த 1 ஆம் வகுப்பு மாணவிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியர் பணி வழங்கி தலைமை ஆசிரியர் கௌரவித்தார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை சியோன் நகர் பகுதியைச் சேர்ந்த கூலி தொழிலாளி கார்மேக கண்ணன் என்பவரின் மகள் தீப பிரபா. இவர், பர்மா காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 1ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தீப பிரபா வழக்கம்போல் பள்ளி வகுப்பறைக்கு வந்துள்ளார்.

image

அப்போது புத்தக பை வைக்கும் இடத்தில் 50 ரூபாய் கிடந்துள்ளது. அதை எடுத்திருந்த மாணவி மாணவி தீப பிரபா தனது ஆசிரியர் ராமலட்சுமி வந்து உடன் அந்த 50 ரூபாயை கொடுத்துள்ளார். அப்போது தான் ஆசிரியர் ராமலட்சுமி தவறவிட்ட 50 ரூபாய் என தெரியவந்தது.

image

இதையடுத்து அந்த மாணவியை மற்ற வகுப்புகளுக்கு அழைத்துச் சென்று அவரது நேர்மையை மாணவர்கள் மத்தியில் சொல்லி கைதட்டி பாராட்டச் சொல்லி அந்த மாணவியை ஊக்கப்படுத்தியுள்ளார். பின்னர் இது குறித்து தலைமையாசிரியர் ஞானசேகரிடம் கூறியதை அடுத்து மாணவியை பாராட்டிய தலைமையாசிரியர் தனது தலைமையாசிரியர் பொறுப்பை அந்த மாணவிக்கு வழங்கி ஒருநாள் தலைமையாசிரியராக்கி மாணவியை கௌரவப்படுத்தினார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்