Published : 03,Sep 2017 08:44 AM

கொடைக்கானல் - பழனி சாலையில் நிலச்சரிவு

Kodaikanal---landslide-on-Palani-road

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பழனி சாலையில் கனமழை காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக மூன்று நாட்களுக்கு அந்த சாலை தற்காலிகமாக மூடப்பட்டது. குறிப்பாக வடகவுஞ்சி பிரிவு அருகே நிலச்சரிவின் போது சாலையின் மேற்புறத்தில் இருந்த ராட்சத பாறை பெயர்ந்து, உருண்டு விழுந்து சாலையை முற்றிலும் துண்டிக்கச் செய்துள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் தடைப்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து ராட்சத பாறையை வெடி வைத்து தகர்த்து, அகற்றும் பணியை துவக்கியுள்ளனர். பாறையை அகற்ற குறைந்தபட்சம் 3 நாட்கள் முதல் 5 நாட்கள் வரை ஆகும் என்பதால் கொடைக்கானல் பழனி சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பழனி வழியாக கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் வத்தலக்குண்டு வழியாக காவல்துறையால் திருப்பி விடப்பட்டுள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்