Published : 01,Sep 2017 10:10 AM

விஜய்சேதுபதியின் கருப்பன் பட டீசர் வெளியானது

Vijay-Sethupathi-s-Karuppanam-movie-teaser-was-released

பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடித்துள்ள கருப்பன் பட டீசர் வெளியாகி உள்ளது.

ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகி வரும் படம் கருப்பன். ஸ்ரீசாய் ராம் கிரியேஷன்ஸ் சார்பில் ஏ.எம். ரத்னம் தயாரிக்கும் இந்தப்படத்தில் விஜய் சேதுபதி, தன்யா ராஜேந்திரன், பாபி சிம்ஹா, பசுபதி உட்பட பலர் நடித்துள்ளனர். ’ரேணிகுண்டா’ படத்தை இயக்கிய பன்னீர்செல்வம் இயக்குகிறார். டி.இமான் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. தென் மேற்குப் பருவக் காற்று, தர்மதுரை படங்களுக்குப் பிறகு விஜய் சேதுபதி மீண்டும் கிராமத்துக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பெரிய மீசையுடன் கம்பீரமாக மாடு பிடி வீரனாக களத்தில் இறங்கியுள்ள 'கருப்பன்' விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்சேதுபதி நடித்த விக்ரம்வேதா பெரும் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்த படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்