Published : 24,Feb 2022 10:38 AM

"ரஷ்யாவிடமிருந்து எங்களை காப்பாற்றுங்கள்" - உலக நாடுகளுக்கு உக்ரைன் வேண்டுகோள்

Save-us-from-Russia--Ukraine-appeal-to-the-nations-of-the-world

தங்கள் நாட்டை ரஷ்ய தாக்குதலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உக்ரைன் தலைநகர் கீவ் மற்றும் கிழக்கு உக்ரைனின் டோனட்ஸ்க் உள்ளிட்ட நகரங்களை ரஷ்ய படைகள் தாக்கத் தொடங்கியுள்ளன. உக்ரைனின் பல நகரங்களில் ரஷ்ய படைகள் குண்டுமழை பொழிவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ரஷ்ய ஏவுகணைகள் சரமாரியாக பாய்ந்து தாக்குவதால் உச்சக்கட்ட பதற்ற நிலை உருவாகியுள்ளது.

image

உக்ரைன் நாட்டில் தாக்குதல் நடத்தும் ரஷ்யாவுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஆனால், ரஷ்யாவின் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்து கொள்ள முடியாது என அதிபர் புடின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் பாதையில் குறுக்கிடுபவர்கள் வரலாறு காணாத அளவு மோசமான பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என்றும் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், தங்கள் நாட்டை ரஷ்ய தாக்குதலில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்று உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர் உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும் என்றும் தூதரக ரீதியில் கடும் நெருக்கடி கொடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Ukraine President Zelensky Calls For Summit With West And Russia To End Border Conflict

அத்துடன், ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு அவர் விடுத்துள்ள கோரிக்கையில், “ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக உள்ள ஒரு நாடு இப்படி விதிகளை மீறி செயல்பட்டால், மற்ற நாடுகளும் இதனை பின்பற்ற நேரிடும். ஐநாவில் உறுப்பு நாடாக உள்ள அனைவரும் உக்ரைனை பாதுகாக்க உதவ வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்