Published : 29,Aug 2017 03:11 PM
ஜேட்லியுடன் தமிழக அமைச்சர்கள் சந்திப்பு: அரசியல் பேசவில்லை என விளக்கம்

தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, சிவி சண்முகம், மைத்ரேயன் எம்பி உள்ளிட்டோர் நிதியமைச்சர் ஜெட்லியை சந்தித்தனர்.
இதன் பின் பேசிய முதலமைச்சர் பழனிசாமி அணியின் மூத்த தலைவர் தம்பிதுரை, இச்சந்திப்பில் அரசியல் எதுவும் பேசப்படவில்லை என்றும், தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கான 17 ஆயிரம் கோடி ரூபாயை பெறுவது தொடர்பாக பேசப்பட்டதாகவும் தெரிவித்தார்.
மத்திய அமைச்சரவையில் தங்கள் அணி இடம் பெறாது என முதலமைச்சர் பழனிசாமி அணியின் எம்பி மைத்ரேயன் தெரிவித்துள்ளார். மத்திய அமைச்சர்கள், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக தமிழக அமைச்சர்களும், தானும் டெல்லி வந்ததாக மைத்ரேயன் தெரிவித்தார்.
இன்று காலை, அதிமுகவின் பெயர் மற்றும் கட்சியின் இரட்டை இலைச் சின்னம் உள்ளிட்ட விஷயங்களில் முடிவெடுக்கும் முன்பு தங்கள் பக்க கருத்தைக் கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் தினகரன் தரப்பைச் சேர்ந்த புகழேந்தி மனு அளித்தார். கட்சியையும் சின்னத்தையும் கைப்பற்றுவது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி அணியினர் டெல்லியில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டிருந்த நிலையில் இம்மனுவை புகழேந்தி அளித்தார்.