Published : 31,Jan 2022 06:49 PM

பிரேசிலை மிரட்டும் கனமழை: 18 பேர் உயிரிழப்பு - 500 குடும்பங்கள் வீடுகள் இழப்பு

18-killed-amid-heavy-rain-in-Brazil-500-families-left-homeless

பிரேசில் நாட்டின் சவோ பவுலா மாகாணத்தில் ஏற்பட்ட கனமழையால் 18 பேர் உயிரிழந்தனர்.

பிரேசில் நாட்டின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான சவோ பவுலாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 500 குடும்பங்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும் அம்மாகாண ஆளுநர் ஜோவா டோரியா தெரிவித்துள்ளார்.

image

கனமழை செவ்வாய்க்கிழமை வரை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளதால் மீட்புப் பணிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேகமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக 15 மில்லியன் ரியாக்களை (ரூபாய் மதிப்பில் 21 கோடி) ஆளுநர் ஜோவா டோரியா விடுவித்துள்ளார்.  

இதையும் படிக்க: மனித குலத்தை அச்சுறுத்தும் காற்று மாசு: குழந்தைகளுக்கான விழிப்புணர்வு காணொளி வெளியீடு!

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்