Published : 27,Jan 2022 07:41 PM

அமெரிக்காவில் உயிர்வாழும் மிகவும் பழமையானதாக நம்பப்படும் 90 வயதான 'மெதுசலா' மீன்

90-year-old-fish-in-US-believed-to-be-the-oldest-living-aquarium-fish

சுமார் 90 ஆண்டுகள் பழமையான மெதுசெலா என்ற மீன், உலகின் மிகவும் பழமையான மீன் என்று நம்பப்படுகிறது.

அத்திப்பழங்களை சாப்பிடவும், வயிறு பகுதியை மெலிதாக வருடிக் கொடுக்கவும் விரும்பும் மெதுசெலா மீன், உலகின் பழமையான மீன் என்று நம்பப்படுவதாக கலிபோர்னியா அகாடமி ஆஃப் சயின்ஸின் உயிரியலாளர்கள் தெரிவித்துள்ள்னர்.

image

சுமார் 90 வயதுடையது என்று நம்பப்படும் இந்த மீன், 4 அடி நீளம் (1.2 மீட்டர்), 40 பவுண்டு (18.1-கிலோகிராம்) எடை கொண்ட ஆஸ்திரேலிய நுரையீரல் மீன்வகை ஆகும், இது 1938 இல் ஆஸ்திரேலியாவிலிருந்து சான் பிரான்சிஸ்கோ அருங்காட்சியகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

நுரையீரல் மற்றும் செவுள்களைக் கொண்ட பழமையான இனமான இந்த ஆஸ்திரேலிய நுரையீரல் மீன், நில மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு இடையேயான பரிணாம இணைப்பாக நம்பப்படுகிறது.

image

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, மிகவும் பழமையான ஆஸ்திரேலிய நுரையீரல் மீன் சிகாகோவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருந்தது. கிராண்ட்டாட் என்று பெயரிடப்பட்ட அந்த மீன் 2017 இல் தனது 95 வயதில் இறந்தது.

ஆர்கானிக் ப்ளாக்பெர்ரிகள், திராட்சைகள் மற்றும் ரோமெய்ன் கீரைகள் மெதுசெலாவின் தினசரி உணவாக வழங்கப்படுகின்றன.
அகாடமியில் இன்னும் இரண்டு ஆஸ்திரேலிய நுரையீரல் மீன்கள் உள்ளன.

image

1952 இல் கொண்டுவரப்பட்ட 11 கிலோ எடையுடைய மீனும், மற்றும் 1990 இல் கொண்டு வரப்பட்ட 7 கிலோ எடையுடைய மீனும் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்தில் உள்ள மேரி நதியிலிருந்து அருங்காட்சியகத்துக்கு கொண்டுவரப்பட்டது.ஆஸ்திரேலிய நுரையீரல் மீன்கள் இப்போது அருகி வரும் உயிரினமாக உள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்