[X] Close

புதுச்சேரி தவில் வித்வான் முருகையனுக்கு பத்மஸ்ரீ விருது

வீடியோ ஸ்டோரி

புதுச்சேரியை சேர்ந்த தவில் வித்வான் முருகையனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

58 வயதான முருகையன், தொடக்கத்தில் தந்தை விவேகானந்தனிடம் தவில் கற்கத் தொடங்கி, பின்னர் வளையப்பட்டி பத்மஸ்ரீ சுப்ரமணியத்தை குருவாக ஏற்று கலையின் நுணுக்கங்களையும் கற்றுக் கொண்டார். அகில இந்திய வானொலியில் ஏ பிளஸ் கிரேட் கலைஞராக உள்ள முருகையன், தமிழக அரசின் கலைமாமணி விருதையும் பெற்றுள்ளார்.

விழுப்புரம் அரசு இசைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் இவர், தனது 23 ஆண்டு கால பணியில் 300க்கும் மேற்பட்ட கலைஞர்களை உருவாக்கியுள்ளார். இந்நிலையில் விருதுக்கு தேர்வானது தொடர்பாக புதியதலைமுறைக்கு பேட்டியளித்த முருகையன், நலிவடைந்த நிலைக்கு தள்ளப்பட்டு வரும் தவில், நாதஸ்வரம் கலைஞர்களுக்கு அரசும், மக்களும் ஆதரவளிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close