Published : 31,Dec 2021 11:51 AM
ஜன.12-ல் மதுரையில் பாஜகவின் ‘மோடி பொங்கல்’ நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

மதுரையில் வரும் ஜனவரி 12 ம் தேதி, தமிழக பாஜக சார்பில் ‘மோடி பொங்கல்’ என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த விழாவுக்காக பாஜக சார்பில், மாநில அளவில் ஏற்பாடு நடைபெற்று வருகிறது.
முன்னதாக ஏற்கெனவே ஜனவரி 12-ம் தேதி, விருதுநகரில் நடைபெற உள்ள நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்பார் என்றும், அப்போது அவர் 11 மருத்துவக் கல்லூரிகள் திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பார் என்றும் தகவல்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. பிரதமருடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும் விழாவில் பங்கேற்பார்கள் எனக் கூறப்படுகிறது.
சமீபத்திய செய்தி: தமிழகம், புதுச்சேரியில் இயல்பைவிட 59% அதிக மழை: வானிலை ஆய்வு மையம் தகவல்