Published : 30,Dec 2021 12:50 PM

"விண்ணப்பித்த அனைவருக்கும் நகைக் கடன் தள்ளுபடி வழங்குக" - ஓபிஎஸ்

Give-jewelry-loan-discount-to-everyone-who-applied-says-ops

கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைகளுக்கு கடன் பெற்ற அனைவருக்கும் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 48 லட்சத்து 84 ஆயிரத்து 726 பயனாளிகளின் விபரங்களை பகுப்பாய்வு செய்ததில், 35 லட்சத்து 37 ஆயிரத்து 693 கடனாளிகள் நகைக்கடன் பெற தகுதி இல்லாதவர்கள் என அரசு குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். வெறும் 13 லட்சத்து 47 ஆயிரத்து 33 பேர் மட்டுமே கடன் பெற தகுதியானவர்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

image

பகுப்பாய்வு என்ற பெயரில் 35 லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும், பகுப்பாய்வு குறித்து ஏன் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடவில்லை எனவும் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். அரசின் அறிவிப்பின் மூலம் 35 லட்சத்திற்கு மேற்பட்டோரை திமுக அரசு கடனாளிகளாக்கியுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்