தமிழ்நாட்டில், மின் கட்டணம் தவிர பிற மின் சேவைகளுக்கு 18 விழுக்காடு ஜி.எஸ்.டி.வரி விதிக்கப்படுவதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியளிப்பதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், அதில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் பதிவுக்கட்டணம், மின் இணைப்புக் கட்டணம், மீட்டர் கட்டணம், வளர்ச்சிக் கட்டணம் ஆகியவற்றுக்கு 18 விழுக்காடு ஜி.எஸ்.டி.வரி வசூலிக்கப்படுகிறது என்ற பத்திரிகை செய்தியை சுட்டிக்காட்டி உள்ளார்.
மேலும் 2017ஆம் ஆண்டு ஜூலை 1 ஆம் தேதி ஜி.எஸ்.டி.வரி அமலுக்கு வந்ததில் இருந்து இதுநாள் வரை வசூலிக்கப்படாதவர்களிடமிருந்தும் வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பன்னீர்செல்வம் குற்றஞ்சாட்டி உள்ளார்.
பொருட்கள் (ம) சேவைகள் வரி குறித்து எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது விமர்சனங்கள் வைத்துவிட்டு தற்போது முதலமைச்சராக பதவிக்கு வந்தபின் அதிமுக ஆட்சியில் பொருட்கள், சேவை வரி வசூலிக்காத இனங்களுக்கும் வரி வசூலிக்க உத்திரவிட்டு வருவது திமுகவின் இரட்டை நிலைப்பாட்டை தோலுரித்து காட்டுகிறது. pic.twitter.com/qrlyPwmC4y
இந்த அறிவிப்பு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளதாகவும் அவர் விமர்சித்துள்ளார். ஆகவே, முதலமைச்சர் இப்பிரச்னையில் மௌனமாக இருக்காமல் உடனே தலையிட்டுத் மின் கட்டணங்களுக்கான ஜி.எஸ்.டி.வரி வசூலிப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், நிரந்தரமாக ரத்து செய்யத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தி உள்ளார்.
தொடர்புடைய செய்தி: வீட்டில் 20 ஆண்டுகளாக மின்சாரம் இல்லை: அடிப்படை வசதி கேட்டு ஆட்சியரிடம் மனு
Loading More post
ஹோல்சிம் இந்தியா (ஏசிசி மற்றும் அம்புஜா சிமெண்ட்) பிரிவை வாங்கியது அதானி குழுமம்!
அரசுப் பேருந்துகளில் கட்டண உயர்வா?: அமைச்சர் சிவசங்கர் விளக்கம்
நேட்டோவில் இணைய தயாராகும் ஸ்வீடன், ஃபின்லாந்து - ரஷ்யா கடும் எச்சரிக்கை
`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?