[X] Close

முல்லைப் பெரியாறு: நீர்மட்டம் 115 அடியை தாண்டியது

Mullai-Periyar--Water-level-crosses-115-feet

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் 115 அடியை தாண்டி உயர்ந்து வருகிறது.


Advertisement

அதேசமயம், அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு ஆயிரத்து 776 கன அடியில் இருந்து ஆயிரத்து 452 கன அடியாக குறைந்தது. எனினும் கணிசமான நீர்வரத்து உள்ளதால் அணை நீர்மட்டம் 114.80 அடியில் இருந்து 115.40 அடியாக உயர்ந்துள்ளது.

தற்போது அணையில் இருந்து குடிநீருக்காக விநாடிக்கு 225 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டம் அதிகரித்து வருவது தமிழக விவசாயிகளிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close