[X] Close

ஆப்கன் போர்: பாகிஸ்தானை நெருக்கும் அமெரிக்கா

Afghan-war--the-United-States-of-Pakistan

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் புகலிடமாகவே தொடர்ந்து விளங்கி வருகிறது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

ஆப்கன் போரில் அமெரிக்கா கூடுதலாக உதவி செய்ய வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கேட்டுக் கொண்டிருப்பதால், பாகிஸ்தான் அதிருப்தி அடைந்திருக்கிறது. பயங்கரவாதத்துக்கு எதிரான அமெரிக்காவின் போரில் இதுவரை பாகிஸ்தான் பெரும் உதவி செய்து வந்திருக்கிறது. தங்களது பிராந்தியத்தைப் போருக்காகப் பயன்படுத்திக் கொள்ளவும் அனுமதி வழங்கியிருந்தது. இது தொடர்பாகக் குறிப்பிட்ட ட்ரம்ப், பாகிஸ்தானுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியிருந்தாலும், அந்த நாடு பயங்கரவாதிகளின் புகலிடமாகவே தொடர்ந்து விளங்கி வருகிறது என்று குறைகூறினார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் இந்தக் குற்றம்சாட்டுக்கு பாகிஸ்தான் மறுப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் தனது விளக்கத்தில், ட்ரம்பின் இந்த விமர்சனம் பெரும் ஏமா‌ற்றத்தை அளித்திருப்பதாக அந்‌நாட்டின் வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், பயங்கரவாதத்தால் பாகிஸ்தான் பாதிக்கப்பட்டது போன்று, உலகில் வேறு எந்த நாடும் பாதிக்கப்பட்டிருக்காது என்றும், பயங்கரவாதத்துக்கு எதிராக பாகிஸ்தானியர்கள் செய்த தியாகத்தை அமெரிக்கா இருட்டடிப்பு செய்துவிட்டது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.


Advertisement

இந்நிலையில் பாகிஸ்தான் விவகாரம் குறித்து நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமெரிக்க வெ‌ளியுறவுத் துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன், பயங்கரவாதிகளை அழிக்கும் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு உதவிக்கரம் நீட்ட அமெரிக்கா தயாராக இருப்பதாகவும், அதே சமயம் பாகிஸ்தான் தனது அணுகுமுறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close