Published : 03,Dec 2021 07:13 AM

'ஒமைக்ரான் - இருவருக்கும் தொற்றின் தீவிரம் அதிகம் இல்லை' - கர்நாடகா சுகாதாரத்துறை

there-is-no-need-to-worry-says-karnataka-health-minister

கர்நாடகாவில் ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ள இருவருக்கும் தொற்றின் தீவிரம் அதிகம் இல்லை என்பதால் யாரும் கவலைப்பட தேவையில்லை என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் கே சுதாகர் தெரிவித்துள்ளார்.

மக்கள் பதற்றமடையாமல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் அமைச்சர் சுதாகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்