[X] Close

தமிழக ஊழல் தடுப்பு ஐஜி வித்யா குல்கர்னி, சிபிஐ இணை இயக்குனராக நியமனம் மத்திய அரசு

இந்தியா

Central-Government-appoints-vidya-jayant-kulkarni-as-Joint-Director-CBI
தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை ஐஜி வித்யா குல்கர்னியை சிபிஐ இணை இயக்குனராக நியமித்துள்ளது மத்திய அரசு.
 
தமிழக காவல்துறையில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை ஐஜியாக பணியாற்றி வருபவர் வித்யா குல்கர்னி. இவரை மத்திய அரசு பணியான சிபிஐ இணை இயக்குனராக நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 1998 ஆம் ஆண்டு தமிழக ஐபிஎஸ் அதிகாரியான வித்யா குல்கர்னி சிபிஐ இணை இயக்குனராக 5 ஆண்டுகள் பணியாற்ற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இவருடன் ஒடிசா காவல்துறை ஐபிஎஸ் அதிகாரியான ஞான்சிஷியாம் உபாத்யா, மகாராஷ்டிரா காவல்துறை ஐபிஎஸ் அதிகாரியான நாவல் பஜாஜ் ஆகியோரையும் சிபிஐ இணை இயக்குனராக நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
 
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close