புதுக்கோட்டையில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியை கண்டு ரசித்த பார்வையாளர்களில் ஒருவரை, காளை குத்தியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததால் போட்டி ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்திலேயே புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் அதிகளவு ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு உள்ளிட்ட பாரம்பரிய போட்டி நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த இரண்டு வருடங்களாக அதிகளவு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் தமிழகத்தில் மெல்ல மெல்ல கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வரக்கூடிய சூழ்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள விராச்சிலை பகுதியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அங்குள்ள திடலில் மஞ்சுவிரட்டு போட்டி இன்று காலைமுதல் நடைபெற்றது.
இந்த போட்டியில் புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட காளைகளும், நூற்றுக்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர். மஞ்சுவிரட்டு போட்டியின் பாரம்பரிய முறைப்படி ஆங்காங்கே காளைகள் அவிழ்த்து விடப்பட்டது. அவிழ்த்துவிட்ட காளைகளை மாடுபிடி வீரர்கள் போட்டி போட்டுக்கொண்டு அடக்கியும் அடக்கம் முயன்றும் வந்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியை விராச்சிலை மட்டுமின்றி புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்தனர்.
பொதுவாக ஜல்லிக்கட்டு போட்டி என்பது வாடிவாசலில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டு பாதுகாப்பான முறையில் நடைபெறும். ஆனால் மஞ்சுவிரட்டு போட்டியில் பாரம்பரிய முறைப்படி ஆங்காங்கே காளைகள் அவிழ்த்து விடப்படுவதால் பார்வையாளர்கள் ஒருவித அச்சத்துடனேயே போட்டியை கண்டு ரசிப்பர். அதேபோல் இன்று நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் எதிர்பாராதவிதமாக பரலி கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா (52) என்ற பார்வையாளரை காளை குத்தியதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரை மீட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு சென்றனர். இதனால் சக பார்வையாளர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர். மேலும் இந்த போட்டியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்ததில் 30க்கும் மேற்பட்டோர் அருகே உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பேட்டி கொடுக்கும்போது அறைக்குள் வந்த மகன்... அப்படியே அணைத்துக்கொண்ட ஹர்திக் பாண்டியா
இந்த மஞ்சுவிரட்டு போட்டியில் 50க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மஞ்சுவிரட்டு போட்டியில் ஒருவர் உயிரிழந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில் மஞ்சுவிரட்டு போட்டியை நிறுத்த வட்டாட்சியர் பிரவீனா உத்தரவிட்டார். இதனையடுத்து மஞ்சுவிரட்டு போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
Loading More post
'அவர் காட்டுத்தனமாக பந்துகளை எறிவார்' - பாக். பவுலர் குறித்து சேவாக் பேச்சு! யார் அவர்?
விசா முறைகேடு விவகாரம் - கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டரை டெல்லி அழைத்துச் செல்ல அனுமதி!
அஜித்தின் ‘ஆலுமா டோலுமா‘ பாடலுக்கு மெஹந்தி விழாவில் நடனமாடிய ஆதி, நிக்கி கல்ராணி
திருமணப் பரிசாக வந்த பொம்மை வெடித்து சிதறியதில் மணமகன் படுகாயம்! பழிவாங்கல் நடவடிக்கையா?
இந்தியாவில் வெளியானது விவோ எக்ஸ்80! சிறப்பம்சங்கள் என்னென்ன?
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
‘ஜடேஜா மன வருத்தத்தில் தான் உள்ளார்’-கேப்டன்சி விவகாரத்தில் நண்பரின் மூலம் வெளிவந்த தகவல்
’புழு’ ஓடிடி திரை விமர்சனம் - க்ரைம் த்ரில்லருக்குள் ஒளிந்திருக்கும் சாதி, மத மர்மம்!
கையெழுத்தானது சென்னை துறைமுகம் - மதுரவாயல் இரண்டு அடுக்கு உயர்மட்ட சாலை! முழு விவரம்