Published : 31,Oct 2021 07:00 PM
டி20 உலகக் கோப்பை : நமீபியாவை வீழ்த்தி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது ஆப்கானிஸ்தான்!

அபுதாபி கிரிக்கெட் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் மற்றும் நமீபியா கிரிக்கெட் அணிகள் நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் சூப்பர் 12 சுற்று போட்டியில் விளையாடின. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்தி ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்களில் 160 ரன்களை எடுத்தது.
161 எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டியது நமீபியா. ஆப்கானிஸ்தான் பவுலர்களை சமாளிக்க முடியாமல் தொடக்கம் முதலே ரன் சேர்க்க தடுமாறிய நமீபியா பேட்ஸ்மேன்கள், சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தனர்.
20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து நமீபியா 98 ரன்களை எடுத்தது. அதன் மூலம் சூப்பர் 12 சுற்றில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.