Published : 28,Oct 2021 04:17 PM

"மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் அடிபணிய மாட்டேன்" - பாஜகவை கடுமையாக விமர்சித்த லாலு பிரசாத்

பீகாரில் ஆறு ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கட்சியின் பரப்புரைக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத், பாரதிய ஜனதாவையும் அதனுடன் கூட்டணி அமைத்துள்ள பீகார் முதல்வர் நிதிஷ்குமாரையும் கடுமையாக விமர்சித்தார்.

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள தாராபூரில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய லாலு, மதவாத சக்திகளுக்கு எப்போதும் அடிபணிய போவதில்லை என கூறினார். மத்திய பாஜக அரசை விமர்சித்த லாலு பிரசாத், எந்த வளர்ச்சிப் பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டினார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் பீகார் மக்கள் தேஜஷ்வி யாதவிற்கே வாக்களித்ததாகவும், நிதிஷ்குமார் ஏமாற்றி சதி செய்து ஆட்சியை கைப்பற்றியதாகவும் தெரிவித்தார். ஆறு ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக பரப்புரை மேற்கொண்ட லாலு பிரசாத்தைக் காண ஏராளமானோர் கூடினர்.

ராகுல் காந்தி Vs பிரியங்கா காந்தி... உ.பி. தேர்தல் கள அணுகுமுறையில் ஈர்ப்பது யார்? 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்