Published : 18,Oct 2021 07:23 PM

டி20 உலகக் கோப்பை : பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற விராட் கோலி பவுலிங் தேர்வு

T20-World-Cup-Practice-match-between-Indian-and-England-Team-and-Virat-Kohli-won-the-toss-decided-to-bowl-first

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் டி20 உலகக் கோப்பை தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பவுலிங் தேர்வு செய்துள்ளார். 

image

“நாங்கள் முதலில் பந்துவீச விரும்புகிறோம். கடந்த காலங்களில் எங்களுக்கு அதன் மூலம் வெற்றியும் கிடைத்துள்ளது. ராகுல் தான் தொடக்க வீரராக களம் இறங்க உள்ளார். நான் மூன்றாவது பேட்ஸ்மேனாக விளையாட உள்ளேன்” என டாஸ் வென்ற பிறகு கோலி தெரிவித்துள்ளார். 

இந்திய அணி விவரம்!

ரோகித் ஷர்மா, கே.எல். ராகுல், இஷான் கிஷன், விராட் கோலி (கேப்டன்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது ஷமி, ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, ராகுல் சாஹர், வருண் சக்கரவர்த்தி. 

இது பயிற்சி ஆட்டம் என்பதால் இந்திய அணியின் வீரர்கள் அனைவரும் சுழற்சி முறையில் களம் இறங்குவார்கள். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்