Published : 16,Oct 2021 10:26 AM

இந்தியாவில் தொடர்ந்து 8 வது நாளாக 20,000-க்கும் குறைவான தினசரி தொற்றாளர்கள் எண்ணிக்கை

India-reports-15-981-new-cases-and-166-deaths-in-24-hours

இந்தியாவில் தொடர்ந்து எட்டாவது நாளாக இன்றும் 20,000-க்கும் குறைவான நபர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதன்படி கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 15,981 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் இதுவரை தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 3,40,53,573 என்றாகியுள்ளது.

கொரோனாவிலிருந்து குணமடைவோர் விகிதமானது, 98.08% என்று உயர்ந்துள்ளது. இது கடந்த மார்ச் 2020 முதல் ஏற்படும் குணமடைவோர் விகிதத்தில் மிக உயர்ந்த விகிதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கொரோனாவிலிருந்து 17,861 பேர் இந்தியளவில் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர். இதன்மூலம் இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 3,33,99,961 என உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் விதிகம் அதிகரித்ததை தொடர்ந்து, மொத்த பாதிப்பில் சிகிச்சையிலிருப்போர் விகிதம் 1% க்கும் குறைவாக 0.59% என பதிவாகியுள்ளது. தற்போதைய நிலவரப்படி கொரோனா சிகிச்சையில் 2,01,632 பேர் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி: ஜவுளிக்கடை திறப்பு விழாவில் காற்றில் பறந்த கொரோனா தடுப்பு விதிகள்

Image

இதுவரை 58.98 கோடி கொரோனா பரிசோதனைகள் இந்தியாவில் செய்யப்பட்டுள்ளன என்றும், அவற்றில் கடந்த 24 மணி நேரத்தில் 9,23,003 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும் சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலவே 97.23 கோடி தடுப்பூசி டோஸ்கள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவிகப்பட்டுள்ளது. இதில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 8.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிகிறது.

கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் 1.33% என உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 166 பேர் கொரோனாவிலிருந்து பலியாகியுள்ளனர். இதன்மூலம் இதுவரை இறந்தவர்கள் எண்ணிக்கை 4,51,980 என உயர்ந்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்