[X] Close

பிக்பாஸ் வீட்டிற்கு வரும் ‘சேட்டை’ நடிகை

-Chattai--actress-coming-to-biggboss-tamil-house

தமிழ் பிக்பாஸ் வீட்டிற்கு பிந்து மாதவியை அடுத்து மிளகா, சேட்டை போன்ற படங்களில் நடித்த சுஜா வருணி வர இருக்கிறார்.

ஓவியா வெளியேறிய பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கான வரவேற்பு குறைந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன் நடிகை பிந்து மாதவியை பிக்பாஸ் வீட்டிற்கு அழைத்து வந்தனர்.

தற்போது பிக்பாஸ் வீட்டிற்கு நடிகை சுஜா வருணி அழைத்து வரப்படுவது உறுதியாகி இருக்கிறது. அவர் வருவது போன்ற ப்ரமோ வீடியோ இன்று வெளியாகி இருக்கிறது. அந்த வீடியோவால் அவர் பிக்பாஸ் வீட்டில் நுழைவது உறுதியாகி இருக்கிறது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இன்று இரவு ஒளிபரப்பப்படும் படும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் என்று ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.


Advertisement

பல படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்துள்ள சுஜா வருணி சமீபத்தில் சசிக்குமார் நடித்த கிடாரி, அருண் விஜய் நடித்த குற்றம்-23 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.


Advertisement

Advertisement
[X] Close