Published : 06,Oct 2021 03:45 PM
பூஜையுடன் தொடங்கிய ஹன்சிகாவின் ‘ரெளடி பேபி’ படப்பிடிப்பு

நடிகை ஹன்சிகா நடிக்கும் ‘ரெளடி பேபி’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.
நடிகை ஹன்சிகா நடிப்பில் ‘மஹா’, ’105 மினிட்ஸ்’ உள்ளிட்டப் படங்கள் வெளியாகவிருக்கின்றன. இந்த நிலையில், ஹன்சிகா ‘ரெளடி பேபி’ என்ற புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தை அபிஷேக் ஃபிலிம்ஸ் ரமேஷ் பி பிள்ளை தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் ராஜா சரவணன் இயக்குகிறார்.
சாம் சி எஸ் இசையமைக்க வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். ஹன்சிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க அவருடன், சத்தியராஜ், மீனா, ராம்கி, சோனியா அகர்வால், லக்ஷ்மி ராய், ஜான் கொக்கன் உள்ளிட்டப் பலரும் நடிக்கிறார்கள்.
இப்படத்தின், படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. பூஜையில் ஹன்சிகா, வைரமுத்து உள்ளிட்டப் பலரும் கலந்துகொண்டனர்.