Published : 04,Oct 2021 11:16 PM

சென்னையை வீழ்த்தி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது டெல்லி!

DC-Beats-CSK-by-3-Wickets-and-seals-first-place-in-the-Points-Table-IPL-2021

துபாய் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 136 ரன்களை எடுத்தது. 

image

அந்த இலக்கை டெல்லி அணி விரட்டியது. தவான் - பிருத்வி ஷா இன்னிங்ஸை ஓப்பன் செய்தனர். பிருத்வி ஷா 18 ரன்களிலும், ஷ்ரேயஸ் 2 ரன்களிலும் பவர் பிளே ஓவர்களில் தங்கள் விக்கெட்டுகளை இழந்தனர்.  

ஆறு ஓவர்கள் முடிவில் 51 ரன்களை எடுத்திருந்தது டெல்லி. தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், ரிபல் பட்டேல் அவுட்டாகி வெளியேறினர். 

image

தாக்கூர் வீசிய 15-வது ஓவரில் அஸ்வின், தவான் என இருவரையும் வெளியேற்றி இருந்தார். அந்த ஓவரல் சென்னையின் பக்கம் ஆட்டத்தை முழுமையாக திருப்பியது. 30 பந்துகளில் 38 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இருந்தது டெல்லி. அந்த அணிக்கு கிரீஸில் நம்பிக்கை அளிக்கும் பேட்ஸ்மேன்களாக இருந்தனர் ஹெட்மயரும், அக்சர் பட்டேலும். 

image

18-வது ஓவரில் 12 ரன்களை எடுத்தது டெல்லி. அந்த ஓவரை பிராவோ வீசி இருந்தார். டெல்லி அணிக்கு சாதகமாக அமைந்தது அந்த ஓவர். ஹெட்மயரின் கேட்ச்சை தவற விட்டிருந்தார் சப்ஸ்டிடியூட் வீரர் கிருஷ்ணப்ப கவுதம். முடிவில் 2 பந்துகள் மீதம் இருக்க 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது டெல்லி. இதன் மூலம் நடப்பு சீசனின் புள்ளிப்பட்டியலில் சென்னையை பின்னுக்குத் தள்ளி முதலிடத்திற்கு முந்தியுள்ளது டெல்லி. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்