Published : 14,Aug 2017 04:13 PM

ட்விட்டரை விட்டு வெளியேறினார் சிம்பு!

Simbu-left-Twitter-account

தனது நிலைப்பாட்டை சமூக வலைதளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் தளங்களில் பகிர்ந்து கொள்வது சிம்புவின் வழக்கம். ட்விட்டரில் ஆக்ட்டிவாக இருந்துவந்த சிம்பு ஓவியாவுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வந்தார். இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்த ஓவியாவை சிம்பு திருமணம் செய்து கொள்ள தயாராக இருப்பதாகக்கூறி அவரது டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டதாக போட்டோஷாப் செய்யப்பட்ட  போலி அறிவிப்பு ஒன்று வெளியாகி வைரலானது. 
அதற்கு சில தினங்களுக்கு முன் கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார் சிம்பு.    
இந்நிலையில் அவர் தனது ட்விட்டர், ஃபேஸ்புக் அக்கவுண்டில் இருந்து வெளியேறி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘எதிர்மறை எண்ணங்கள் இருந்தாலும், நேர்மறை சிந்தைதான் எனது வலிமையே. ஆனால் இன்றைய சமூக ஊடகத்தில் எதிர்மறை எண்ணங்களே ஆதிக்கம் செலுத்துகின்றன. அதில் பங்கு வகிக்க எனக்கு பயமாக இருக்கிறது. ஒரு நட்சத்திரத்துக்கு சமூக ஊடகம் அவசியம்தான். ஆனால் நான் என் மனம் சொல்வதை கேட்கிறேன். நான் விலகும் முன் சொல்ல விரும்புவது இதுதான், எப்போதும் அன்பைத் தேர்ந்தெடுங்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்